Tuesday, 29 July 2014

நெஞ்சைத் தொட்ட நட்பு

கூட்டை அடையும் கிளிகள் 
கொட்டித் தீர்க்கும் கதைகள் 
புரியா மொழியில் பேசும் அவை
புதிராய்த் திகழும் கடைசி வரை.

சுதந்திரமாய் சுற்றி வந்தேன் 
எந்திரமாய் நகன்ற மக்களும் 
தந்திரமாய்த் திரியும் மனிதரும் 
மந்திரமாய் எனைக்கண்டு ஸ்தம்பித்தார்.

கூண்டில் அடைக்க சிலர் எண்ண
ஊண் கொடுத்து சிலர் அனுபவிக்க
பண்புள்ள மனிதர் சிலரேனும் கண்டு
எண்ணம் பூக்க வந்தேன் நான்!

இப்படி பலப்பல பேசுமோ கிளிகள்?
எப்படி நீ பேசினாலும் கிளியே!
அஞ்சிக் கிளைகளில் அமரும் நீ,
நெஞ்சில் நட்பாய் அமர்ந்தாயே?

No comments:

Post a Comment