சிலவற்றை சொல்ல முடிவதில்லை
சொல்லிவிட்டாலும் மதிப்பில்லை
மறக்க ஏன் ஆவதில்லை ?
மனதுக்குள்ளும் இடமில்லை.
எங்கு தான் கொட்டுவது ?
கோபமாய் உற்றாரிடமும்
குமுரலாய் பெற்றாரிடமும்
விரக்தியாய் சுற்றத்திடமும்
புலம்பலாய் நண்பர்களிடமும்
சிடு சிடுப்பாய் பிள்ளையிடமும்
கடு கடுப்பாய் வேலைஆட்களிடமும்
வடித்து என்ன ஆவதோ ?
தவிக்கும் உன் மனதுக்குள்ளே
தங்கமாய் ஜொலிக்கும் அந்தப்
பரம்பொருளை ஏன் காணாய் நீ ?
அதன் ஒளி உன்னை ஈர்க்கவில்லையா ?
மன அழுத்தத்தை உடைத் தெறிக்கும்
அருளாற்றல் அன்றோ அது?
மன அழுக்கையும் துடைத்துத்,
தும்பைப் பூப்போல் உன்னை
தூய்மைப் படுத்தும் துடைப்பானும்
அதுவன்றி வேறென்னவோ?
உன்னை உள்நோக்கி சற்றே பார்!
உனக்கே தெரியும் உன்பலம், என்னென்று ஏதென்று?