சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள்
சொல்லச் சொல்ல தெவிட்டாது
சொல்லுமே அழகு பெரும்.
என்னே என்னே என வியந்தேன்
என்றுமே வியப்பிலிருந்து மீளேன்.
வீற்றிருப்பது ஓரிடம் எனினும்
வீடெல்லாம் பரவி உள்ளாய்
நான் என்ன செய்துவிட்டேன்,
நாளும் உன்னை பூஜிக்க?
ஆனந்தம் கொண்டவன் நீ
ஆதலினால் என்னை ஏற்றாய்.
முழுமை பெற்றவன் நீ
முற்றும் அறிந்தவன் நீ
நிறைவு மிகவும் கொண்டதாலே
நித்தியம் என்னை காக்கிறாய்
தன்னிறைவு உன் குணம்
தன்மையாய்த் தெரிகிறது
எதிர்பார்த்து அடியவர் முன்
என்றுமே நின்றதில்லை
அறிந்து விட்ட காரணத்தால்
அடியவர் யாரென்று, அவரை
அனுதினமும் காப்பதே கடமையாய்
அழகனே! தவறாமல் காக்கிறாய்!
உனது அன்பில் ஒருதுளியேனும்
உனக்கு நான் தர விழைகிறேன்
எனக்கு நீ தரும் ஆனந்தம்
என்று நான் உனக்குத் தருவேனோ?
.jpg)