Thursday, 2 October 2014

கண்ணன் எனும் மன்னன்

கண்ணில் நிறை கண்ணனை,
கண் நிறை கண்ணனை.
கருவில் வை கண்ணனை
கருநிற வண்ணனை
உருவில் உயர் மன்னனை
அருவிநின்றும் உயர்ந்தவனை!

அள்ளித் தூவு மலர்களை
உள்ளில் நினைந்து அவனை
தெள்ளத் தெளிவாய் நாமம்
கள்ளம் அன்றி சொல்லிப்பார்!
நெருக்கம் கண்டு விடுவாய்
உருக்கமான அவன் உறவில்.

No comments:

Post a Comment