Saturday, 19 July 2014

தோசை சொன்ன பாடம்!

தனித்துவம் தரும் குறிகள் 
மனிதனுக்குப் பலப் பல
உடல் எடை உயரம் நிறம் 
முக ஜாடை , முடி நீளம் எனப் பல
கைஎழுத்தும் ஒரு குணமே
வையத்தினின்றும் தனிப்படுத்த
இருவேறு மனிதர் தாமும் 
ஒரேழுத்து எழுதிடாரே.

அத்தகைய ஓருண்மை
தோசையிலே கண்டுகொண்டேன் 
ஒவ்வொருவர் கையிலும் 
உருமாறும் தோசை - ஒரேமாவில்!
தாயின் சொத்தாய்
தனம் வரும் திறமை வரும்.

அங்கனம் தானோ வருகிறது 
மங்கையரின் தோசை வார்க்கும் திறன்?
அதே கல் அதே மாவு 
அதே தோசை வருவதில்லை. 
பொன்னிறமாய் மகளுக்கும்
வெண்ணிறமாய் மகனுக்கும்
பக்குவமாய் செய்யும் பெண்,
சத்தியமாய் ஒன்றை அறிவாள்:
வேகாத தோசை கல்லைவிட்டு 
வேள்வி செய்தாலும் வருவதில்லை
அழகாய் வெந்து நிற்பதோ
அழையாமலேயே வருமென்று

நொந்த மனமும் அப்படிதான்
முந்திச் சென்று சரிசெய்ய
ஒட்டி உபத்திரவம் அளித்துவிடும்
விட்டு தானும் பிடித்தாலோ
அழகாய் தன்னிலை உணர்ந்து வரும்.
பழகுதல் நன்று, தோசைக்
கல்லின்  குணம் போன்றே
மெல்லிய மக்கள் குணமும் என்று!

No comments:

Post a Comment