Thursday, 17 July 2014

வாய்ப் பூட்டு

பெண்ணே உன் வாய்க்கு
போடு ஒரு பூட்டு.
"அடித்தாரை சொல்லி அழு"
தொட்டிலில் மட்டுமே!

பொறுத்துக்கொள் மகளே 
அறுத்தெறிவார் சொல் கேட்டால்.
புகுந்த இடத்தில் அனுசரிக்கவே
பிறந்தது முதல் பயிற்சி.

குடும்பம் தேடும் அமைதி
கொடுத்துக் காப்பவள் நீ!
ஒன்றோ இரண்டோ பலவோ,
விட்டுக் கொடுக்க அறிந்தவள் நீ.

பேசினால் தானோ தீரும்?
யோசித்துப்பார் பெண்ணே!
பேசுவதாலே பெருகும் அலையாய் 
தூசு போன்ற பிரச்சனைகள்.

எனவே தாய் வீட்டு சீதனமாய்,
ஞாபகமாய் இட்டுச் செல் 
திண்டுக்கல் பூட்டு, உண்மையில்
கண்டுகொண்ட நல்வழி!

No comments:

Post a Comment