Friday, 18 July 2014

தென்றல் பேசியது!

ஆசையாய் வீசும் காற்று
ஆயிரம் என்னிடம் சொல்கிறது.

கிசுகிசுக்கும் மரக்கிளைகள் 
கீச்சுகீச்சென்னும் பறவைகள்

ஒத்து ஊதி வருகின்றன
ஒருமுகமாய் செய்தி சொல்ல!

காற்றே இல்லா நாட்களில் எனை 
தூற்றி திரியும் மனிதர்களே

வீசுகிறேன் மனதார,
வீட்டுக்குள் விட்டாலென்ன?

உன்னை தழுவிச் செல்கயில்
மென்மையாய் நெஞ்சைத் தொட்டேனே!

விலகிபோன பின்பும் உன்னை
விட்டுபோவதில்லை நான்.

தாவரம் செடி கொடிகளை மட்டும்
தாலாட்டிப் போவதில்லை நான்

உன்னை மகிழ்விக்க ஓயாமல் வீசுகிறேன்
என்னை அனுமதி உன்னுள்ளே

பறந்து வா என்கூடே!
இறகு போல் உன்னை ஏற்றுவேன்.

ஆணை அனுப்பிய என் அப்பன்
மானிடர் இன்பமே கேட்கிறான்.

தவழும் தருணம் என்றுவரை?
தவம் செய்து கண்டிலேன் எனவே

தென்றலாய் வீசும் என் அன்பை
தன்னை மறந்து அனுபவி!



No comments:

Post a Comment