வந்து வந்து போகும் மழையே!
உன் வருகை
என் தனிமையை தகர்க்கிறது.
ஒரு தோழமையைத் தருகிறது.
உன் சலசலப்பை
நான் கேட்க, பதிலுக்கு
என் மன ஓசையும்
கேட்டுச் செல்கிறாய்!
ஓய்ந்த ஒரு சில மணிகள்
தெளிந்த காற்றாய் வீசுகிறாய்!
தேய்த்துத் துவட்டிய உடல் போல
பளிச்சிடும் உள்ளும் புறமுமே!
தூய மரக்கிளைகளை
தாயாய் நீயும் நீராட்டி
ஒய்யாரமாய் அவை ஆடுகயில்
ஒளிந்திருந்து ரசிக்கிறாய்!
ஒருமுறை நானும் நனைகிறேன்
துப்புரவாய் எனைத் துவைப்பாயா?
தினமும் குளியல் போதாது
அகத்தைத் தூய்மைப் படுத்தவே!
No comments:
Post a Comment