குழலைக் கோலாக்கு
சின்ன கண்ணன்
என்னை முறைக்கிறான்,
கண்களை அகல விரித்து!
சரி கண்ணா, சரி, சரி,
சரி செய்கிறேன் என்னை,
சாவி எங்கே? உன்னிடமன்றோ?
ஆய நங்கை யசோதை,
தாய்க்குக் கட்டுண்டாய்,
தாயாய் எனை ஆட்கொள்ளாய்?
என் போக்கில் விட்டு
எனை ஏளனப் படுத்தாதே,
உன் கொற்றம் செலுத்து என்மேல்!
அறியாது உழல்கிறேன்
தெரியத்தான் படுத்தாயோ,
அரிதான வாழ்விதென்று?
குழலைக் கோலாக்கு!
வழிகாட்டு! பக்திப் பாதையில்
செழிப்புற இட்டுச்செல்!!
Translated for friends who cannot enjoy Tamil!!!
Make Rod of Your Flute
Young Kannah
Stares at me,
With His eyes wide open!!
OK Kannah OK, OK,
Will set right me,
Where is the key? Not with You?
Cowherd woman Yashodha,
You got controlled by her,
As a mom, wont You take charge of me?
Leaving me to myself
Dont let me down,
Exercise Your rule on me!!
Struggling in ignorance
Wont You bring awareness that
Rare this life is?
Make rod of your flute!
Direct me! On the path of devotion
Progressively guide me!!
No comments:
Post a Comment